”அஞ்சல் வாக்கு வைக்குமிடங்களைக் கேமரா பொருத்திக் கண்காணிக்க வேண்டும்” : தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 3004
அஞ்சல் வாக்கு வைக்குமிடங்களைக் கேமரா பொருத்திக் கண்காணிக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஞ்சல் வாக்குகள் வைக்கும் இடங்களைக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திக் கண்காணிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அஞ்சல் வாக்கு உறைகளில் வேட்பாளர் பிரதிநிதிகள் கையொப்பம் பெறத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமான வேட்பாளர்கள் இருப்பதால் அவர்களின் பிரதிநிதிகளிடம் அஞ்சல் வாக்கு உறைகளில் கையொப்பம் பெறுவது சாத்தியமில்லை எனத் தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து எந்தக் குற்றச்சாட்டுக்கும் இடமில்லா வகையில், அஞ்சல் வாக்குகளைப் பாதுகாக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments