எவர்கிவன் கப்பல் கேப்டன் உள்ளிட்ட 25 ஊழியர்களும் இந்தியர்கள்... பாதுகாப்பாக இருப்பதாக நிறுவனம் அறிவிப்பு!

0 21095
சூயஸ் கால்வாயில் சிக்கி நிற்கும் எவர்கிவன் கப்பல்

சூயஸ் கால்வாயில் விபத்துக்குள்ளாகி நிற்கும் எவர் கிவன் கப்பலின் கேப்டன் உள்ளிட்ட அத்தனை பேரும் இந்தியர்கள்தான். இவர்கள், அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.

ஜப்பானின் ஷொய் கிஷன் காய்சா நிறுவனத்துக்கு சொந்தமான எவர்கிவன் கப்பல் தைவான் நாட்டின் எவர்கிரீன் மரைன் கார்ப்பரேசன் நிறுவனம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இந்த கப்பல் சீனாவில் இருந்து நெதர்லாந்தின் ராட்டர்டாம் நகரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, கடந்த 23 - ஆம் தேதி கடுமையான புழுதி புயல் காரணமாக சூயஸ் கால்வாயில் விபத்துக்குள்ளானது. கால்வாயை மறித்துக் கொண்டு குறுக்கு நெடுக்காக கப்பல் நிற்பதால் இந்த கடல் வழிபாதையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை இயக்கிய கேப்டன் உள்ளிட்ட 25 பேரும் இந்தியர்கள்தான். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் தவிர கப்பலில் இருந்த சூயஸ் கால்வாய் நிர்வாகத்தை சேர்ந்த எகிப்து நாட்டை சேர்ந்த இரு பைலட்டுகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர். முதல்கட்ட விசாரணையில், கப்பலில் தொழில்நுட்ப கோளாறுகளே , இன்ஜீன் கோளாறுகளோ விபத்துக்கு காரணம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை கப்பலில் எண்ணெய்கசிவு ஏற்படவில்லை என்பது ஆறுதலிக்க கூடிய செய்தி. சூயஸ் கால்வாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், தற்போது, வரை 206 கப்பல்கள் டிராபிக்கில் மாட்டிக் கொண்டு நிற்கின்றன. சூயஸ் கால்வாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், கப்பல்கள் ஆப்ரிக்காவின் நன்னம்பிக்கை முனையை சுற்றி ஐரோப்பாவுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், கூடுதலாக 2 வாரங்கள் பயணகாலம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

ஷொய் கிஷன் காய்சா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள அத்தனை பேரிடத்திலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விபத்துகளில் சிக்கும் கப்பல்களை மீட்பத்தில் திறைமையான நெதர்லாந்து நாட்டின் போகாலிஸ் நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் விரைவில் சூயஸ் கால்வாய்க்கு வந்துள்ளனர். இதனால், கப்பலை மீட்கும் பணி துரிதமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த எவர்கிவன் கப்பல் 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்டது. அதாவது எம்பயர் ஸ்டேட் கட்டத்தை விட நீளமானது. உலகின் மிகப் பெரிய சரக்குக்கப்பல்களில் இதுவும் ஒன்று. ஒரே சமயத்தில் 20,000 கண்டெய்னர்களை ஏற்றி செல்லும் திறன் படைத்தது.மணிக்கு 22.8 நாட் வேகத்தில் செல்லக் கூடியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments