இந்தியக் கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்திய இலங்கைப் படகுகள் : ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

0 2614
இந்தியக் கடல் பகுதியில் போதைப் பொருள் கடத்திய இலங்கைப் படகுகள் : ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்

ந்தியக் கடல் பகுதி வழியாக கடத்தப்பட்ட 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஏகே 47 ரக துப்பாக்கிகளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்கு கடல் பகுதியில் லட்சத் தீவுகள் வழியாக வெளிநாட்டுப் படகுகளில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடலோர காவல் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மினிகாய் தீவுகளுக்கு அருகே சென்ற 3 இலங்கை படகுகளை சோதனையிட்டபோது, அதில் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட 300 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதைப் பொருளும், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகளும், ஆயிரம் தோட்டாக்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து படகில் இருந்தவர்கள் விசாரணைக்காக கேரளா அழைத்துச் செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments