மும்பை தானே ஆற்றங்கரையில் மன்சுக் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் கைது செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாஸேயை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
மும்பை தானே பகுதியில் தொழிலதிபர் மன்சுக் ஹிரானியின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கைது செய்யப்பட்டுள்ள காவல் உதவி ஆய்வாளர் சச்சின் வாஸேயை அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
மன்சுக்கிடமிருந்து ஸ்கார்ப்பியோ காரின் சாவிகளை சச்சின் வாஸே வாங்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அதன் பின்னர் மாயமான மன்சுக் ஹிரானி தானே ஆற்றங்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவ இடத்தில் வைத்து சச்சின் வாஸேயிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.இதனிடையே சச்சின் வாசே 16 பைகள் நிறைய பணத்துடன் 5 நட்சத்திர விடுதியில் பத்து நாட்கள் ஒரு பெண்ணை அழைத்து வந்து தங்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால் தமது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது தாம் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக சச்சின் வாஸே தெரிவித்துள்ளார்.
Comments