தமிழகத்தில் தபால் ஓட்டுப் பதிவு வீடியோ மூலம் படம்பிடிக்கப்படும்... தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல்
தபால் வாக்கு பதிவு செய்யும் போது வீடியோ பதிவு எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தபால் வாக்குகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் போது தேர்தல் அலுவலருடன் காவலர் ஒருவரும் செல்வார் என்றார். 44,759 வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுவது கண்காணிக்கப்படும் என்று அவர் கூறினார்.
வருமான வரித்துறையினருக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில் திருவண்ணாமலையில், சோதனை நடத்தி வருவதாக கூறிய அவர், வருமானவரித்துறை சோதனைக்கும் தேர்தலுக்கு தொடர்புள்ளதா என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும் என்றார்.
தமிழ்நாட்டில் 10,528 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், அதில் 300 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் அவர் தெரிவித்தார்.
Comments