சென்னையில் நாளை முதல் தொடங்குகிறது தபால் ஓட்டுப்பதிவு.... வீடுகளுக்கே சென்று முதல் முறையாக வாக்குகளை பதிவு செய்கிறது தேர்தல் ஆணையம்...
சென்னையில் தபால் ஓட்டுபதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் 7300 பேர் தபால் ஓட்டுபோட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை 7 நாட்களில், இதற்காக நியமிக்கப்பட்ட 70 வாக்குப்பதிவு குழுக்கள் வீடுகளுக்கு சென்று தபால் ஓட்டுகளை பதிவு செய்வார்கள். வாக்காளர்களுக்கு தேதி, நேரம் போன்றவற்றை குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களின் அடையாள விவரங்களை ஆய்வு செய்த பின்னர் தபால் வாக்குசீட்டு வழங்கப்படும்.
வாக்காளரின் பெயர், அடையாள ஆவணங்களின் விவரம் ஆகியவற்றை பதிவேட்டில் பதிவு செய்து வாக்காளரின் கையொப்பம் அல்லது கட்டை விரல் ரேகை பதிவு செய்யப்படும். பின்னர் வாக்காளர் தன்னுடைய வாக்கினை பதிவு செய்து, வாக்கு சீட்டை முறையாக மூடி, சீல் வைக்கப்பட்ட பெட்டகத்தில் செலுத்த வேண்டும்.
Comments