ஏப்ரல் முதல் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரம்.. நெல் நடவுப் பணிகளை முன்கூட்டியே தொடக்கிய விவசாயிகள்
தமிழகத்தில் ஏப்ரல் முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் என முதலமைச்சர் அறிவித்துள்ளதால் கும்பகோணம் வட்டாரத்தில் விவசாயிகள் முன்கூட்டியே வேளாண் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
காவிரிப் பாசன மாவட்டங்களில் பருவம் தவறிப்பெய்த மழையால் சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்து விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது. இதனால் கோடை நெல் பயிரிடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கும்பகோணம் வட்டாரத்தில் ஆறு, கால்வாய்களில் நீர் வராத நிலையிலும் மின்மோட்டாரால் இறைத்த நீரைக் கொண்டு பத்தாயிரம் ஏக்கரில் உழவு மற்றும் நெல் நடவுப் பணி நடைபெற்று வருகிறது.
ஏப்ரல் முதல் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்ததை நம்பி நெல் பயிரிடும் பணிகளை முன்கூட்டியே தொடங்கிவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Comments