பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை குறித்த விசாரணை ஐ.நா. விசாரணையாளர் ஆக்னசுக்கு சவூதி தரப்பில் இருந்து வந்த மிரட்டல் உண்மையே - ஐ.நா.மனித உரிமை கவுன்சில்
பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை குறித்து விசாரணை நடத்திய ஐ.நா.சுதந்திர விசாரணையாளர் ஆக்னஸ் காலாமார்டுக்கு, சவூதி அரசு உயர் அதிகாரி கொலை மிரட்டல் விடுத்தார் என்ற தகவலை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உறுதி செய்துள்ளது.
சவூதி பட்டத்து இளவரசரும், நிழல் மன்னருமான முகம்மது பின் சல்மானின் உத்தரவுப் படியே கஷோகி கெய்ரோவில் வைத்து கொடூரமாக கொல்லப்பட்டார் என அமெரிக்க உளவுத்துறை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கஷோகி கொலை குறித்து விசாரணை நடத்திய தம்மை, சவூதி தரப்பில் இருந்து மிரட்டியதாக ஆக்னஸ் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆக்னசின் குற்றச்சாட்டு உண்மை என ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ரூபர்ட் கோவில்லே (Rupert Colville) கூறியுள்ளார்.
Comments