வட கொரியா வீசிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் கிழக்காசிய நாடுகள் பதற்றம்
வட கொரியா ஏவிய இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளால் கிழக்காசிய நாடுகள் பதற்றம் அடைந்துள்ளன.
தனது கிழக்கு கடற்கரையில் இருந்து இந்த இரண்டு ஏவுகணைகளையும் வட கொரியா ஏவியது என ஜப்பான் பிரதமர் சுகா யோஷிஹைட் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவின் ஏவுகணைகள் ஜப்பானுக்கு சொந்தமான சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாக அவர் கூறினார். இந்த தகவலை தென் கொரியாவும், அமெரிக்காவும் உறுதி செய்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, கண்டம் விட்டும் கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்க கூடாது என வட கொரியா மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments