காஞ்சிபுரம் அருகே தனியார் மருத்துவக் கல்லூரியில் மேலும் 15 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா

0 2874

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் புதிதாக 15  மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இரண்டு நாட்களுக்கு முன் 38 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மற்ற மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்  மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் மருத்துவக் கல்லூரியில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments