பங்குனி உத்தர திருவிழாவை ஒட்டி, திருவாரூர் தியாகராஜ கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலம் : பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்துச் சென்ற பக்தர்கள்

0 2062
பங்குனி உத்தர திருவிழாவை ஒட்டி, திருவாரூர் தியாகராஜ கோயிலில் ஆழித் தேரோட்டம் கோலாகலம் : பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்துச் சென்ற பக்தர்கள்

ங்குனி உத்திரத் பெருவிழாவை முன்னிட்டு, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் உலக புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வடம் பிடித்து தேர் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஆழித் தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டு பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments