கடந்த 4 ஆண்டுகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ரூ.50,975 கோடி நிதி பெற்றுள்ளன: மத்திய அரசு
கடந்த 4 ஆண்டுகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 50 ஆயிரம் கோடி அளவிற்கு வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய், இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து 2018 -19ம் ஆண்டில் 17 ஆயிரத்து 540 கோடி ரூபாய் நிதியைப் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த 4 ஆண்டுகளில் இந்தத் தொகை 50 ஆயிரத்து 975 கோடி என்றும், நிதி அதிகம் பெற்ற மாநிலங்களில் டெல்லி முதலிடத்திலும், தமிழகம் 2ம் இடத்திலும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிக நிதி கொடுத்த நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாகவும் நித்தியானந்த ராய் கூறியுள்ளார்.
Comments