ஹரியானாவில் வீடுகளுக்கே நேரடியாக டீசலைக் கொடுக்கும் புதிய திட்டத்தை தொடங்கியது பாரத் பெட்ரோலியம் நிறுவனம்
ஹரியானாவில் டீசலை தொழில்நிறுவனங்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தொடங்கியுள்ளது.
ஹரியானாவை ஒட்டியுள்ள ஃபரிதாபாத்தில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிறுவனங்களுக்கு தேவையான டீசலை அவர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
இதற்காக ஹம்சஃபர் என்ற செயலியும் தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லி -பதர்பூர் எல்லையில் உள்ள கிட்டங்கியிலிருந்து இந்தச் சேவை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ள பிபிசிஎல், தொழிற்சாலைகள் மட்டுமின்றி வீட்டுவசதி சங்கங்கள், மால்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பெரிய போக்குவரத்து மற்றும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் மொபைல் கோபுரங்களும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.
Comments