ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சம்மன்
ஐஎன்எக்ஸ் மீடியா பணமோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனும் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள இந்த வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் எஸ்.எஸ்.பஸ்லாரராமன், ஐ.என்.எக்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிம் முகர்ஜியா மற்றும் ஐ.என்.எக்ஸ் மீடியா மற்றும் ஐ.என்.எக்ஸ் நியூஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் அனுப்பியுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments