ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் ஒரு சில நாட்களில் 39 யானைகள் உயிரிழப்பு - இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி
ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் மீண்டும் யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருவது இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
உலகில் அதிகம் யானைகள் வாழும் நாடு போட்ஸ்வானா. இங்குள்ள மோரேமி கேம் காப்புக் காடுகள் பகுதியில் கடந்த சில தினங்களாக 39க்கும் மேற்பட்ட யானைகள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
யானைகளின் உடலில் தந்தங்கள் அப்படியே இருந்ததால் வேட்டையாடப்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.
அவைகளின் உடலை ஆய்வுக்கு உட்படுத்திய போது நச்சு நுண்ணியிர்கள் காரணமாக அவை உயிரிழந்தது தெரியவந்தது. முன்னதாக கடந்த ஆண்டு ஒகவாங்கோ வனப்பகுதியில் 330 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Comments