உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா அடுத்த மாதம் பொறுப்பேற்பு
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி. ரமணா அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார். அவர் பெயரை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி போப்டே பரிந்துரை செய்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பொன்னாவரம் கிராமத்தில் பிறந்தவரான நீதிபதி ரமணா, வழக்கறிஞராக 1983ம் ஆண்டு சட்டத்துறையில் நுழைந்தார். பல்வேறு முக்கிய வழக்குகளை வாதாடி பல முக்கியப் பொறுப்புகளையும் வகித்து படிப்படியாக முன்னேறினார்.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக உயர்வு பெற்றார்.அடுத்த மாதம் 48 வது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ரமணா பொறுப்பேற்க உள்ளார்.
Comments