கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகள் வீடு வீடாக வாக்கு வேட்டை

0 3477
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மாணவிகள் வீடு வீடாக வாக்கு வேட்டை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய சிவனடியார், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி பயனாளிகள் களமிறங்கியுள்ளனர்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் திமுக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மு.க. ஸ்டாலினுக்கு ஆதரவாக பல்வேறு குழுக்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மு.க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட அனிதா அச்சீவர்ஸ் அகாடமி மூலம் இலவசமாக பயிற்சி பெற்று மேற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பலரும் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.

இங்கு பயிற்சி பெற்று பயனடைந்த மாணவிகள் கொளத்தூர் தொகுதியில் ஒரு குழுவாக பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். அவர்கள் வீடு,வீடாகச் சென்று கல்விக்காக தி.மு.க. என்னென்ன திட்டங்களை அறிவித்துள்ளது என கூறி வாக்கு சேகரிக்கின்றனர்.

அதே போல இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதிகளில் உருது பேசி வாக்கு சேகரிக்கும் இளம் பெண்களும் பிரச்சார குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட மல்லிகைப் பூ நகரில் நாதன் என்ற சிவனடியார் ஒருவர் பிரச்சார குழுவுடன் சென்று திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாக்கு சேகரித்தார்.

"ஆன்மிகம் என்பது வேறு அரசியல் வேறு என்றும், மத அரசியல் பேசும் கட்சிகளை நம்ப வேண்டாம் என கூறி அந்த சிவனடியார் திமுகவிற்கு வாக்கு சேகரித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments