பிரேமலதாவை துரத்தும் கொரோனா..! பிரச்சாரத்துக்கு நடுவே மடக்கினர்

0 11586

விருத்தாசலம் தொகுதியில் களமிறங்கியுள்ள விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பிரச்சாரத்தில் இருந்த பிரேமலதாவை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கட்டாயப்படுத்தி அதிகாரிகள் அழைத்துச்சென்றனர்.

விருத்தாசலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக பிரேமலதா விஜயகாந்த் களமிறங்கியுள்ளார்

தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வந்த பிரேமலதாவை புதன்கிழமை மதியம் வழி மறித்த சுகாதாரத்துறையினர், கொரோனா பரிசோதனைக்கு வருமாறு அழைத்தனர். முதலில் அவர் வர மறுத்த நிலையில் உடன் சென்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்களிடம் , பிரேமலதாவின் சகோதரர் எல்.கே.சுதீஷின் மனைவிக்கும் கொரொனா தொற்று உறுதியாகி உள்ளதால் அவருடை குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பிரேமலதா விஜயகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தங்களுடன் வந்தால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தி 6 மணி நேரத்தில் முடிவை சொல்லி விடுவோம் அதன் பிறகு பிரச்சாரத்தை தொடரலாம் என்று கூறி அழைத்தனர்.

வாக்குவாதத்திற்கு பின்னர் பிரேமலதா விஜயகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார், அவருடன் காரில் பயணித்த கட்சி நிர்வாகிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் பின்னர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாத பிரேமலதா, எந்த தடையுமின்றி ஆதரவாளர்களுடன் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஏற்கனவே விஜயகாந்தும், பிரேமலதாவும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள். தற்போது மீண்டும் அவர்களது குடும்பத்தினரிடையே தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments