கேரளாவில் 1.10 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பதாக காங்கிரஸ் புகார்

0 1858
கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற மொத்தம் 1.10 லட்சம் போலி வாக்காளர்களை ஆளும் கட்சி உருவாக்கி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா புகார் கூறியுள்ளார்.

கேரளாவில் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற மொத்தம் 1.10 லட்சம் போலி வாக்காளர்களை ஆளும் கட்சி உருவாக்கி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா புகார் கூறியுள்ளார்.

கானூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரளாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பெயர்கள் உள்ள வாக்காளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். இதில் 1,09, 693 பேரின் பெயர் 140 தொகுதிகளில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவர்கள் அனைவருக்கும் வாக்காளர்கள் அடையாள அட்டைகளும் விநியோகம் செய்யப்பட்டு இருப்பது எப்படி என்ற அவர், இரட்டை வாக்குகள் மூலம் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments