புதுச்சேரியில் பாஜக சார்பில் வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து பிரச்சாரம்.. தேர்தல் ஆணையம் மவுனம் காப்பது ஏன்? உயர் நீதிமன்றம் காட்டம்
புதுச்சேரியில் வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பிரச்சாரம் செய்வதாக அளித்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில், பா.ஜ. க சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து பிரச்சாரம் செய்யப்படுவதாக நீதிமன்றத்தில் மனு தாக்கலானது. ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக அதில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, அரசியல் கட்சி எப்படி வாக்காளர்களின் மொபைல் எண்களை பெற முடிந்தது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆளுங்கட்சி என்பதால் தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறதா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
Comments