ஆந்திராவில் இறகுபந்து விளையாடும் போது மயங்கி விழுந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

0 5812
ஆந்திராவில் இறகுபந்து விளையாடும் போது மயங்கி விழுந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழப்பு

ந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், இறகு பந்து விளையாடிக்கொண்டிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விளையாட்டு அரங்கிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணபாவரம் காவல் நிலைய இஸ்பெக்டராக இருந்த பகவான்பிரசாத் தமது நண்பர்களுடன் சேர்ந்து இறகுபந்து விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென மயங்கி விழுந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பகவான் பிரசாத் விளையாடி கொண்டே சரிந்து விழுந்து இறந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளன. பகவான்பிரசாத் 2009 ல் சப் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments