புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிக்கலாம்: மத்திய அரசுக்கு நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை

0 2498
புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமிக்கலாம்: மத்திய அரசுக்கு நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை

அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணாவை நியமிக்கலாம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

தற்போதைய தலைமை நீதிபதியான போப்டேயின் பதவி காலம் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நிறைவடைகிறது. எனவே புதிய தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரைக்குமாறு மத்திய அரசு நீதிபதி போப்டேவுக்கு கடிதம் அனுப்பியது.

தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகளில், போப்டேவுக்கு அடுத்த இடத்தில் மூத்த நீதிபதியாக நீதிபதி ரமணா இருக்கிறார். அவரை புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கலாம் என பரிந்துரைத்து, மத்திய அரசுக்கு நீதிபதி போப்டே கடிதம் அனுப்பி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments