மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 618 புள்ளி சரிவு

0 5532

உலோகத் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலை வீழ்ச்சியடைந்ததால் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் அறுநூறு புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.

இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இருந்தே மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் சரிந்து வந்தது. பகல் 10.40 மணியளவில் சென்செக்ஸ் 618 புள்ளிகள் சரிந்து 49 ஆயிரத்து 434 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 173 புள்ளிகள் சரிந்து 14 ஆயிரத்து 642ஆக இருந்தது. உலோகத் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்களின் பங்கு விலை 4 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments