சேலத்தில் முதலமைச்சர் - துணை முதலமைச்சர் திடீர் ஆலோசனை

0 4845

சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து திடீர் ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் வருகிற 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ஆகியோர் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக சேலம் சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அங்குள்ள சென்னீஸ் கேட்வே (gateway) என்ற தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இன்று மாலை அவர் எடப்பாடி சட்டமன்ற தொகுதி மற்றும் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.

இதனிடையே, சேலத்தில் இருந்து பிரச்சாரத்திற்காக கரூர் புறப்பட்ட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனியார் விடுதி சென்று அங்கு துணை முதலமைச்சர் ஓ.பி.எசுடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பிரச்சார சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments