ரயில்களில் சிகரெட் பிடித்தால் அபராதத்துடன் சிறைத்தண்டனை : பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை
ரயில் நிலையத்தில் புகை பிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில், டெல்லி-டேராடூன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்தது தொடர்பான விசாரணையில், கழிவறை குப்பைத்தொட்டியில், சிகரெட்டை அணைக்காமல் வீசியதே காரணம் என்று தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, இத்தகைய தீவிபத்துகளை தடுக்க ஒரு வார காலத்துக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரயில்களில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரயில்களிலோ, ரயில் நிலைய வளாகங்களிலோ புகை பிடிப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments