18 நாடுகளைச் சேர்ந்த 38 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ரஷ்யா
ரஷ்யா 18 நாடுகளைச் சேர்ந்த 38 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியது.
தென்கொரியா, ஜப்பான், கனடா, சவூதி அரேபியா, ஜெர்மனி, இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் செயற்கோக்கோள்களுடன் இதில் துனிசியாவின் முதல் உள்நாட்டுத் தயாரிப்பான சேலஞ்ச் 1 செயற்கைக் கோளும் செலுத்தப்பட்டது. கஜகஸ்தானில் உள்ள பைக்கானுர் ஏவுதளத்தில் இருந்து இவை விண்ணில் செலுத்தப்பட்டன.
இருளும் ஈரமும் மிக்க மேகங்களுக்கு இடையே சோயுஸ் ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள்கள் புவிவட்டப் பாதையில் செலுத்தப்படும் வீடியோ காட்சியை ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு ஏஜன்சி வெளியிட்டது.
Comments