ஏட்டு எரிமலைக்கிட்ட தப்பிக்கலாம் இவரு சிவஞான முத்துவே..! அரசு வாகன திருட்டு

0 3933
ஏட்டு எரிமலைக்கிட்ட தப்பிக்கலாம் இவரு சிவஞான முத்துவே..! அரசு வாகன திருட்டு

கடலூரில் அரசு வாகனத்தைத் திருடிக்கொண்டு தப்பிய குடிகார ஆசாமியை தலைமைக் காவலர் ஒருவர் மடக்கிப்பிடித்தார். ஏட்டுவுக்கு டிமிக்கி கொடுக்க நினைத்த ஜீப் திருடர் சிக்கிய பின்னணி

கடலூர் உழவர் சந்தை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பொலிரோ ஜீப்பை யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக வயர்லெஸ் மூலம் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது ரோந்துப் பணியில் இருந்த புதுச்சத்திரம் காவல் நிலைய ஏட்டு சிவஞானமுத்து சாலையில் தீவிரக்கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சந்தேகத்துக்கிடமான வகையில் அதிவேகமாக வந்த அரசுக்கு சொந்தமான பொலிரோ ஜீப்பை அவர் மடக்க முயல அந்த வாகனம் நிற்காமல் சென்றது.

இதையடுத்து தனது மோட்டார் சைக்கிளில் விரட்டிய சிவஞானமுத்து பி.முட்லூர் அருகே அந்த ஜீப்பை மடக்கினார். அதன் உள்ளே இருந்த நபர் இறங்கி தப்பி ஓட முயற்சித்தார்- அவரையும் மடக்கிப் பிடித்தார்.

விசாரணையில், அரசு வாகனத்தை திருடிச்சென்றவர் கருப்பஞ்சாவடியை சேர்ந்த முனிவேல் என்பதும், அனாமத்தாக நின்ற அரசு வாகனத்தை எடுத்துக் கொண்டு சுற்றுலா செல்வதாக கூறி அசரவைத்தான் அந்த குடிகார ஆசாமி.

ஜீப்பை உங்ககிட்ட கொடுத்தாச்சுல்ல அப்புறம் என்ன ஏன் பிடிக்கிறீங்க ? என்று சொல்லி சாமர்த்தியமாக தப்ப முயன்றவனை ஓடி விடாமல் மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச்சென்றார் ஏட்டு சிவஞானமுத்து..!

சினிமா போலீஸ் ஏட்டு எரிமலைக்கிட்ட தப்பிக்கலாம், ஆனால் நிஜத்துல நம்ம காவலர்கள் கிட்ட தப்ப முடியாது என்று நிரூபித்த ஏட்டு சிவஞானமுத்துவைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிசு வழங்கி கவுரவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments