தமிழக பெண்களின் இடுப்பு பேரலாகிவிட்டது..! முகம் சுளிக்க வைத்த லியோனி

0 15418
பாரின் மாட்டு பாலை குடித்து தமிழக பெண்களின் இடுப்பு பேரல் போலாகிவிட்டது எனவும், பெண்களும்,சிறுவர்களும் பலூன் போல ஊதிக்கிடப்பதாகவும் தொண்டாமுத்தூர் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பேச்சாளர் லியோனி தெரிவித்த விமர்சனத்தால் சர்ச்சை எழுந்துள்ளது

ஃபாரீன் மாட்டு பாலை குடித்து தமிழக பெண்களின் இடுப்பு பேரல் போலாகிவிட்டது எனவும், பெண்களும்,சிறுவர்களும் பலூன் போல ஊதிக்கிடப்பதாகவும் தொண்டாமுத்தூர் தேர்தல் பிரச்சாரத்தில் திமுக பேச்சாளர் லியோனி தெரிவித்த விமர்சனத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

திமுக பேச்சாளர்களில் முக்கியமானவரான பட்டிமன்ற நடுவரான திண்டுக்கல் ஐ.லியோனி. மேடைகளில் எதிர்கட்சியினரை ஆபாசமாகவும், தரைக்குறைவாகவும் விமர்சிப்பது வாடிக்கையான ஒன்று.

அந்தவகையில் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்து வாக்கு சேகரித்த திண்டுக்கல் ஐ. லியோனி, நாட்டுமாடுகளை வளர்க்கும் சிவசேனாதிபதியை புகழ்வதற்காக பயன்படுத்திய வார்த்தைகள் தமிழக பெண்களை இழிவுபடுத்திய சர்ச்சைக்குள் லியோனியை சிக்கவைத்துள்ளது.

ஃபாரீன் மாட்டு பாலை குடித்து குடித்து, நம்ம ஊர் பெண்களும் , அவர்களது பிள்ளைகளும் பலூன் மாதிரி இத்த தண்டி ஊதிக்கிடப்பதாக கேலி செய்த லியோனி, ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்ததாகவும், பிள்ளைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அப்போது ஒருவர் அவரை இடைமறித்து ரேசன் அரிசியை காண்பித்து அவரது பேச்சை திசைமாற்ற முயன்றார், ஆனால் அதன் பின்னரும் தாம் என்ன பேசுகிறோம் என்பதை உணராத, திண்டுக்கல் ஐ.லியோனி மீண்டும் பெண்களை இழிவாக பேசத்தொடங்கினார். முன்பு எட்டு போல இருந்த பெண்களின் இடுப்பு பாரின் மாட்டு பாலை குடித்ததால் தற்போது பேரல்போலாகி விட்டதாகவும், பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி ஓடுவதாகவும் கேலி பேசினார்.

பட்டிமன்ற பேச்சின் போது சுவாரஸ்யத்துக்காக பெண்களை கேலி பேசுவதை வாடிக்கையாக செய்து வந்த லியோனி, தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களை இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளது குறிப்பிடதக்கது.

முன்னதாக வாகனத்தில் ஓட்டுக்கேட்டு வரும் போது மைக்கில் பேசிக் கொண்டுவந்த நபர், தங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால் அடிப்போம் என்பது போல பேசியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments