தமிழ்நாட்டில் மேலும் 1437 பேருக்கு கொரோனா.. 9 பேர் உயிரிழப்பு

0 3273
தமிழ்நாட்டில், மேலும் 1,437 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 902 பேர் குணமடைந்து,வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில், மேலும் 1,437 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 902 பேர்  குணமடைந்து,வீடு திரும்பியுள்ளனர்.

சிகிச்சை பலனின்றி 9 பேர் உயிரிழந்ததாக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகரில், மேலும் 532 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 149 பேருக்கும், கோயம்புத்தூரில் 146 பேருக்கும், திருவள்ளூரில் 71 பேருக்கும், தஞ்சாவூரில் 67 பேருக்கும், புதிதாக கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது.

14 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. சவுதி அரேபியாவில் இருந்து மதுரை வந்த நிலையில், 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கர்நாடகா, மேற்குவங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த நிலையில், தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments