எடப்பாடி முன்னாள் எம்.எல்.ஏ காவேரி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்..
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காவேரி, திமுகவிலிருந்து விலகி முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
திமுக மாநில விவசாய தொழிலாளரணி இணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தவர் காவேரி. அவரோடு தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துவும் சேலத்திலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்து, அதிமுகவில் இணைந்தனர்.
இவர்களில் காவேரி கடந்த 2006ஆம் ஆண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து பாமக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments