ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி
ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட இலங்கை போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை விசாரித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தது.
அந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தால் தீர்மானம் வெற்றி பெற்றது. இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான்,கியூபா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.
Comments