கோழிப்பண்ணையில் பணியாற்றிய இளைஞரின் மரணத்தில் மர்மம் எனக்கூறி, உறவினர்கள் சாலை மறியல் - காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு

0 2345
தேனியில், தனியார் கோழிப்பண்ணை எலக்ட்ரீசியனாக பணியாற்றிய இளைஞரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

போடிநாயக்கனூரை அடுத்த டொம்ச்சேரியைச் சேர்ந்த பிரபாகரன், வீரபாண்டி அருகே தாடிச்சேரி பகுதியில் எஸ்கேஎம் என்ற தனியார் கோழிப்பண்ணையில் கடந்த 8 மாதங்களாக எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார்.

திங்கட்கிழமையன்று பணிக்குச் சென்ற பிரபாகரன், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உடற்கூறு ஆய்விற்காக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் திரண்ட உறவினர்கள், சாவில் மர்மம் இருப்பதாக கூறி, மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments