ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்..

0 1466
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசி விடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜாமீன் மனுக்களை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தபோது, அவதூறாக பேச மாட்டேன் என்று கர்ணன் உத்தரவாதம் அளித்ததை ஏற்று 10 வழக்குகளிலும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சென்னையில் தங்கியிருக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது,  விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments