"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்..
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமாக பேசி விடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
ஜாமீன் மனுக்களை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தபோது, அவதூறாக பேச மாட்டேன் என்று கர்ணன் உத்தரவாதம் அளித்ததை ஏற்று 10 வழக்குகளிலும் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சென்னையில் தங்கியிருக்க வேண்டும், சாட்சிகளை கலைக்க கூடாது, விசாரணைக்கு தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
Comments