சென்னையில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக அசோக் நகரிலுள்ள தனியார் ஹோட்டலில் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக திமுகவினர் அங்கிருந்த 10 பேரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரித்ததில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளான அவர்கள், நடைபாதை வியாபாரிகள் உரிமம் பெறுவது குறித்த விழிப்புணர்வுக் கூட்டத்தை தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் நடத்தியது தெரியவந்தது.
இதனையடுத்து தேர்தல் அதிகாரியின் புகாரின் பேரில் சட்டவிரோதமாக கூடுதல்,தொற்றுநோய் தொடர்புடைய செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Comments