கடன் தவணை சலுகை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கு : கூடுதல் வட்டி, அபராத வட்டி வசூலிக்க கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு
கடன் தவணை சலுகை அளிக்கப்பட்ட 6 மாத காலத்தில், கூடுதல் வட்டி, அபராத வட்டி வசூலிக்க கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கடன் தவணையை தள்ளி வைக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தது.
அந்த காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்க கூடாது என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், தாங்கள் நிதி மற்றும் பொருளாதர நிபுணர்கள் இல்லை என்று சுட்டிக்காட்டி, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்தனர்.
கடன் தவணை தள்ளிவைப்பு காலத்தை ஆகஸ்ட் மாதத்தற்கு பின் நீட்டிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
அபராத வட்டியாகவோ, கூட்டுவட்டியாகவோ வசூலித்திருந்தால் அதனை திருப்பி அளிக்கவும் ஆணையிட்டனர்.
Comments