கொரோனா காலத்தில் மூடப்பட்ட ஆலைகள் மீண்டும் செயல்பட ரூ.15000 கோடி நிதி ஒதுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

0 2250
கொரோனா காலத்தில் மூடப்பட்ட ஆலைகள் மீண்டும் செயல்பட ரூ.15000 கோடி நிதி ஒதுக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

கொரோனா காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுமென மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த உடன், பெட்ரோல், டீசல் விலை உடனடியாக குறைக்கப்படும் என்றும், அவர் உறுதியளித்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, ஓசூர், தளி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, சூளகிரி ரவுண்டானா பகுதியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

நான் ரெடி, நீங்க ரெடியா என கேட்டு உரையைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடி நீர் திட்டம் தந்த உரிமையில் வாக்கு கேட்டு வந்ததாக குறிப்பிட்டார்.

கொரோனா காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் செயல்பட 15000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின் தொழில் வளம் பெருக சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கும் உதவிக்கரம் நீட்டப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் வீதி வீதியாக நடந்து சென்று, வியாபாரிகள், சிறு கடைக்காரர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து, பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

சேலம் கோட்டை மைதனாத்தில், சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments