பெண் எஸ்பிக்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் - சிபிசிஐடி

0 2958

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு விசாரணை 8 வாரத்திற்குள் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு, சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பாராட்டு தெரிவித்தார்.  சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இது வரை 87 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவருடைய மொபைல் போன் கைப்பற்றப்பட்டு, சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதனை பதிவு செய்த நீதிபதி, விசாரணையை விரைந்து முடிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments