தூத்துக்குடி : சந்தேகத்தால், அண்ணியை கொலை செய்த மைத்துனர்!

0 34928
கொலையான ராமலட்சுமி

தூத்துக்குடி அருகே கணவர் இறந்து விட்ட நிலையில், குழந்தை பெற்ற பெண்ணை மைத்துனர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிந்தலக்கட்டை கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை என்பவரின் மனைவி ராமலட்சுமி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்துரை இறந்து விட்டார். இதனால், ராமலட்சுமி தனியாக வசித்து வந்துள்ளார். சில மாதங்களாக ராமலட்சுமியின் நடவடிக்கையில் அவரின் மைத்துனர் கொம்பன் என்ற சேகருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால், ராமலட்சுமியை கொம்பன் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. அடிக்கடி இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ராமலட்சுமி கர்ப்பமடைந்துள்ளார். மூன்று வாரங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதனால், ராமலட்சுமியிடன் குழந்தைக்கு யார் தந்தை என்று கேட்டு கொம்பன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ராமலட்சுமி தனக்கு பிறந்த குழந்தையை யாருக்கும் காட்டாமல், தனக்கு தெரிந்தவர்களுக்கு தத்து கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது . இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் தனியாக இருந்த ராமலட்சுமியிடம் கொம்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கொம்பன் ராமலட்சுமியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே ராமலட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

தப்பியோடிய கொம்பனை போலீஸார் தேடி வருகின்றனர். தகவலறிந்த ஓட்டப்பிடாரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . ராமலட்சுமி யாரிடம் குழந்தையை ஒப்படைத்தார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. ராமலட்சுமி கொலை செய்யப்பட்ட வீட்டை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் டிஎஸ்பி சங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments