அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கொலராடோ மாகாணத்தில் போல்டர் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் கிங் சூப்பர் என்ற பல்பொருள் அங்காடியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுட்டார். இதில் காவல் அதிகாரி ஒருவர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கடந்த வாரம் அட்லாண்டாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் அதேபோன்ற சம்பவம் அங்கு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments