அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனளிப்பதாக தகவல்
ஆஸ்ட்ராஜெனகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கிய தடுப்பூசி, அமெரிக்காவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட சோதனையில், கொரோனா அறிகுறி உள்ளவர்களிடம் 79 சதவிகித பலனை அளித்துள்ளதாக சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே நேரம், தீவிரமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் அது 100 சதவிகித பலனை அளித்துள்ளதாகவும் சீரம் இந்தியா தெரிவித்துள்ளது.
சீரம் இந்தியா நிறுவனம் இந்த தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வதுடன் பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.
Comments