டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றம்
டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் தேசியத் தலைநகர் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனால் ஆம் ஆத்மி அரசுக்கும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் துணைநிலை ஆளுநருக்கு கூடுதலான அதிகாரம் கிடைக்கும். டெல்லி அரசு என்றால் அது ஆளுநரையே குறிக்கும் என்று இந்தப் புதிய சட்டம் கூறுகிறது.
இந்த சட்டத்திற்கு ஆம் ஆத்மி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. ஜனநாயகத்தை நசுக்க முயற்சி என மமதா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Comments