கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரை 130 கோடி போலி முகநூல் கணக்குகள் முடக்கம்: ஃபேஸ்புக் நிறுவனம்
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 130 கோடி போலி கணக்குகளை நீக்கியுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தவறாக பரப்பப்படும் தகவல்களைச் சமாளிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் அதிகாரி கை ரோஷன் தெரிவித்துள்ளார். 60க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்பட்டு வரும் முகநூலில், ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான போலி கணக்குகளைத் தடுத்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு கணக்கின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முயற்சி செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தவறான பதிவுகள் பதிவிடப்பட்டால் தங்களுக்குத் தெரிவிக்கும் படியும் பேஸ்புக் அதிகாரி கேட்டுக் கொண்டார்.
Comments