அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அறிவித்தது தெலுங்கானா அரசு

0 3417
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு அறிவித்தது தெலுங்கானா அரசு

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் 30 சதவீத ஊதிய உயர்வை தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதும் 58 ல் இருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள். சட்டப்பேரவையில் இது தொடர்பான அறிக்கையை வாசித்த முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இந்த ஊதிய உயர்வு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகத் தெரிவித்தார்.

ஒப்பந்த ஊழியர்கள், வெளியில் இருந்து பணியாற்றுவோர் உள்பட அனைவரும் பயன் பெறுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments