உற்பத்தி செலவு அதிகரிப்பதால் காரின் விலையை உயர்த்துவதாக மாருதி சுஸுகி நிறுவனம் தகவல்
உற்பத்தி செலவு அதிகரித்து விட்டதால், அடுத்த மாதம் கார் விலையை உயர்த்த உள்ளதாக மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது இந்த ஆண்டில் மாருதி அறிவித்துள்ள இரண்டாவது விலை உயர்வாகும்.
கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் இந்திய வாகன உற்பத்தி துறையில் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை.
இந்த நிலையில் விற்பனை சிறிது அதிகரித்தாலும் அது நீடிக்குமா என உறுதியாக தெரியாத நிலையில், உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது. மஹிந்திரா, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே விலைகளை உயர்த்தியுள்ளன.
Comments