நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, நடிகை கங்கணா ரணாவத்துக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு..!

0 5497
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி, நடிகை கங்கணா ரணாவத்துக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு..!

டந்த 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு தனுசும், துணை நடிகருக்கான விருதுக்கு விஜய் சேதுபதியும் தேர்வு பெற்றுள்ளனர்.

டெல்லியில் அறிவிக்கப்பட்ட அந்த பட்டியலில், அசுரன் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வு பெற்றுள்ள தனுஷ், இந்தியில் வெளியான போன்ஸ்லே படத்தில் நடித்த மனோஜ் பாஜ்பாயுடன் இணைந்து விருதை பகிர்ந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதியும், விசுவாசம் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு டி.இமானும் தேர்வு பெற்றுள்ளனர். ஒத்த செருப்பு படத்திற்கு ஜுரி விருதும், அத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது, கேடி என்ற கருப்பு துரை திரைப்படத்திற்காக நாக விஷாலுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகைக்கான விருது கங்கணா ரணாவத்துக்கு வழங்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments