டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் குறித்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்யும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
தேசிய தலைநகரான டெல்லியில் கூடுதல் அதிகாரம் முதலமைச்சருக்கா, துணைநிலை ஆளுநருக்கா என்பதில் தொடர்ந்து இழுபறி நிலையும், அரசியல் குழப்பமும் காணப்படுகிறது.
அதற்கு முடிவு கட்டும் வகையில், டெல்லி அமைச்சரவை எந்த முக்கிய முடிவை எடுத்தாலும் அதற்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் கட்டாயம் என்ற வகையில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா கடந்த 15 ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டபோது, அதை எதிர்த்து ஆளும் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments