தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 17 மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று

0 3176
தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் 17 மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று

ஞ்சை மாவட்டத்தில் இன்று 17 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த மாவட்டத்தின் அம்மாபேட்டை அரசு உதவிபெறும் மகளிர் பள்ளியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 57 மாணவிகள் உள்பட 69 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள்.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் முகாம்கள் அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் கும்பகோணத்தில் உள்ள தனியார் மகளிர் பள்ளியில் 10 மாணவிகள், தஞ்சை மாரியம்மன் கோவிலில் உள்ள அரசு பள்ளியில் 2 மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேப்போல் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் புதிதாக 5 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் 17 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments