மீனவர் பிரச்சனைக்கு உரிய தீர்வு; மு.க.ஸ்டாலின் வாக்குறுதி..!
திமுக ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
தூத்துக்குடி விவிடி சிக்னல் பகுதியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி தொகுதி வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், பெண்களுக்கு அரசுப் பணிகளில் 40 சதவீத இடஒதுக்கீடு, கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை உள்ளிட்ட திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் உறுதியாக நிறைவேற்றப்படும் என்றார்.தூத்துக்குடி மாவட்டத்திற்கான நலத்திட்ட வாக்குறுதிகளையும் அவர் அளித்தார்.
பின்னர் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரண்மனை பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். பல்வேறு கட்டங்களில் பல ஆண்டுகளாக போராடி இந்த நிலைமைக்கு தாம் உயர்ந்ததாக அப்போது அவர் குறிப்பிட்டார். நெருக்கடி நிலையின் போது ஜனநாயகத்தை காக்க அரசியல் கைதியாக சிறையில் ஓராண்டு இருந்ததையும் ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.
திமுக ஆட்சியில் இருந்த போது உள்ள அடிப்படை உணவு பொருட்களின் விலையையும், தற்போது உயர்ந்துள்ள விலைவாசியையும் ஸ்டாலின் ஒப்பிட்டு பேசினார். திமுக ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்கள், பெண்கள், சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்கள் தமிழக இளைஞர்களை கொண்டு நிரப்பப்படும் என அவர் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகு முத்துகோனுக்கு மணிமண்டபம், தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம், விளாத்திக்குளம் மிளகாய் சாகுபடியாளர்களின் கோரிக்கையான குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளையும் வழங்கி மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோசை, முதல் டோஸ் போட்டுக்கொண்டதில் இருந்து ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் போட்டுக் கொண்டால் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Comments