சென்னையில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக கூறி 7 பேரை திமுகவினர் பிடித்துக் கொடுத்தனர்
சென்னை தியாகராயர் நகர் தொகுதியில், வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக கூறி, 7 பேரை, திமுகவினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அசோக்நகர் சங்கமம் உணவகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, சாலையோர கடை வியாபாரிகளுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கூறி அங்கு திரண்ட திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதியின் ஆதரவாளர்கள், கவர்களில் வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
பணம் வழங்கிய 7 பேரை பிடித்துக் கொடுத்த நிலையில், மூன்று பேர் தப்பியோடியதாகவும் திமுகவினர் தெரிவித்தனர்.
Comments